பந்தலூரை அடுத்துள்ள அய்யன்கொல்லி அருகே பழங்குடியினர் பெருமை தின நிகழ்ச்சி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 26 November 2023

பந்தலூரை அடுத்துள்ள அய்யன்கொல்லி அருகே பழங்குடியினர் பெருமை தின நிகழ்ச்சி


பந்தலூரை அடுத்துள்ள அய்யன்கொல்லி அருகே பழங்குடியினர் பெருமை தின நிகழ்ச்சி

  


  ஆதி திராவிடர் மற்றும் பழஙகுடியின நலத்துறை சார்பில் பழங்குடியினர் பெருமை தின நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 



பந்தலூர் அய்யங்கொல்லி அடுத்துள்ள போத்துக்கொல்லி பகுதியில் ஒன்றிம அரசு  பழங்குடியின நலத்துறை மற்றும் ஆதிதிராவிட  நலத்துறை இனைந்து  குழந்தைகள் வள மையத்தில் வைத்து மருத்துவ முகாம் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பழங்குடியினர் ஆய்வு மைய இயக்குனர் முனைவர் உதயகுமார் மற்றும்  கோவை பிரைம்  மெடிக்கல்  சென்டர்  மைக்ரோ பயோலஜி   பொது மேலாளர் சதீஸ் மற்றும் பிரைம் மெடிக்கல் சென்டரின்  லேப் டெக்னீசியன்ஸ் பணியாளர்கள்  கலந்து கொண்டனர்...



மேலும் கூடலூர் பந்தலூர் பகுதியில்  உள்ள பழங்குடியினர் பகுதிக்கு நேரில் சென்று  பழங்குடியினர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதால் இதுதொடர்பாக ஆய்வு மேற்கொள்ளபட்டு அரசுக்கு அனுப்பபட்டது. இதனை தொடர்ந்து அவர்களுக்கு இரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ளபட்டு எதனால் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது என கண்டறிந்து இதற்கு நடவடிக்கை எடுக்க தயார் நிலையில் உள்ளனர். மேலும்  இவர்களுக்கு ஏற்பட்ட குறைபாடுகளை சரி செய்ய மருத்துவ முகாம் நடத்த  உள்ளோம் மேலும் இன்றைய தினம் இரத்த சோகையால் ஏற்படும் குறைபாட்டை பொம்மலாட்டம் முலம் விளக்கம் வழங்கப்பட்டது ..



இந்த மருத்துவ முகாமிற்கு மாவட்ட ஆட்சியர்  .பிரைம் மெடிக்கல் சென்டர்  மைக்ரோ பயோலஜியின்  மேனேஜிங் டைரக்டர் மணி.மற்றும் ஆதி திராவிடர் நலன்  மற்றும்  பழங்குடியின அமைப்பு  செயலாளர், பழங்குடியின நலத்துறை இயக்குனர்  போன்றோர் உறுதுணையாக இருந்தனர். 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad