நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சோலாடி ஆற்றில் குளிக்கச் சென்ற காவலர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்....
நீலகிரி மாவட்டம் கூடலூர் சேரம்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோலாடி சோதனை சாவடியில் பணிபுரிபவர் காவலர் கோவிந்தராஜ் வயது 26. இன்று சோலாடி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார் அப்போது நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பவில்லை இதை அடுத்து அவருடன் பணிபுரியும் சக காவலர்கள் என்னவானது என பார்க்க ஆற்றுக்குச் சென்றுள்ளனர் அப்போது அவரது காலணியை கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் தண்ணீரில் மூழ்கிய நிலையில் கோவிந்தராஜை கண்டுள்ளனர் உடனடியாக கரைக்கு அவரை தூக்கி வந்து பார்த்தபோது அவர் இறந்ததை கண்டு அதிர்ச்சடைந்தனர் .
பின்பு சம்பவ இடத்திற்கு சென்ற நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் அவர்கள் காவலர் இறந்த ஆற்றுப்பகுதியை ஆய்வு செய்து சக காவலர்களிடம் சம்பவம் குறித்து விசாரித்தார் பின்பு இறந்த காவலரின் உடல் உதகை அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது ஆற்றில் குளிக்கச் சென்ற காவலர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment