கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் நிலச்சரிவு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 9 November 2023

கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் நிலச்சரிவு



 நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் இரவு பெய்த  கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது அதேபோல் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையிலும் நிலச்சரிவு ஏற்பட்டது  குஞ்சப்பனை சோதனை சாவடியில் போலீசார் வாகன போக்குவரத்திற்கு அனுமதி மறுத்து பாதுகாப்பாக வரிசை கட்டி நிற்க அறிவுறுத்தினர் 



நவம்பர் மாதம் என்றாலே நீலகிரி மாவட்டத்தில் அதிக மழை காரணமாக நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர் ஏற்படுவதால் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருந்துவருகிறது இன்று கோத்தகிரி குன்னூர் உதகை குந்தா தாலூக்காக்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மு. அருணா அவர்கள் விடுமுறை அறிவித்தார் நீலகிரியில் இருந்து சமவெளிபகுதிக்கு செல்லும் சாலைகள் மண் சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் மேட்டுப்பாளையம் மற்றும் கோவை கல்லூரி மாணவர்கள் இன்று நடைபெறும் செமஸ்டர் தேர்வில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டதுடன் அத்தியாவசிய பொருட்களின் வரவும் தடைபட்டது விவசாய விளை பொருட்கள் சரியான சமயத்திற்க்கு கொண்டு செல்ல முடியாமல் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஒளிப்பதிவாளர் C.விஸ்ணு மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad