பந்தலூர் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் ஏராளமானகழக தொண்டர்கள் கலந்துக் கொண்டனர்..
பந்தலூர் பகுதியில் கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் பாராட்டு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பந்தலூர் நகர செயலாளர்சேகர் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திமுக மாவட்ட செயலாளர் பாமு முபராக்.மாநில பொறியாளர் அணி துனைசெயலாளர் பரமேஸ்குமார் கூடலூர் ஒன்றிய செயலாளர் லியகத்தலி பந்தலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவனந்தராஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் சுஜேஸ். மாவட்ட வழக்கறிஞர் அணிஅமைப்பாளர் சிவசுப்பிரமணி.செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம்.மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆழன்.மாவட்ட இலைஞர் அணி அமைப்பாளர் முரளிதரன் . நெல்லியாள நகர மன்ற தலைவர் சிவகாமி துனை தலைவர் நாகராஜன். கூடலூர் சட்ட மன்ற தொகுதி ஐடிவிங் அமைப்பாளர் பாலா. தொழிற்சங்க தலைவர்கள் மாடசாமி.சுப்பிரமணி. மற்றும் திமுக கட்சி பொருப்பாளர்கள் கவுன்சிலர்கள் விவசாய அணி .மகளீர் அணி.பொருப்பாளர்கள் கட்சி உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்டச்செயலாளர் பாமு முபராக் கூறுகையில் கடந்த அதிமுக ஆட்சியில் தேயிலைத்தோட்டத்தொழிலாளருக்கு முறைப்படி எந்த அடிப்படை வசதி செய்து தரவில்லை இவர்களுக்கு சம்பளம் உயர்த்தி தரவில்லை.இவர்களின் நலன் மீது அக்கறை காட்டவில்லை. தற்போது திமுக ஆட்சி காலத்தில் தான் தோட்டதொழிலாளர்கள் மீது தளபதியார் அக்கறை கொண்டு மகளீர் உதவி தொகை வழங்கினார்.
மேலும் இங்க உள்ள தோட்ட தொழிலாளர்களின் தொழிற் சங்கம் சார்ந்த தலைவர்கள் என்னிடம் முறையிட்டனர்.பின்பு நான் பாராளுமன்ற உறுப்பினர் ராசா அவர்களிடம் எடுத்துறைத்து தொழிலாளர்களின் முக்கிய பொருப்பில் உள்ளவர்கள் நகரசெயலாளர் ஒன்றிய செயலாளர்களை அழைத்து ராசா அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி அதை முறைப்படி தளபதியாரிடம் பேசி பரிந்துரைத்துஅதன் பின் சம்பள உயர்வு போனஸ் போன்றவை வழங்க தளபதியார் அறிக்கை வெளியிட்டார் என கூறினார் நிகழ்ச்சிமில் தோட்டத் தொழிலாளர்கள் மாவட்டச் செயலாளரர் பாமு முபராக் மாநில பொறியாளர் அணி துனை செயலாளர் பரமேஸ்குமார் அவர்களுக்கும் சால்வைஅணி வித்து கௌரவ படுத்தினர்.பின்பு தேயிலை தோட்ட தொழிற்சங்க தலைவர்கள் இனிப்புகளை வழங்கினர்.கூட்டத்தில் இறுதியாக ஐடிவிங் பாலா நன்றி கூறினார்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment