நீலகிரி மாவட்டத்தில் தேயிலை மற்றும் மலை காய்கறிகள் விவசாயம் நடைபெறுகிறது
வனவிலங்குகளின் தொல்லை இயற்கை பேரிடர் தண்ணீர் தட்டுப்பாடு விவசாய பணியாளர் தட்டுப்பாடு கூலி உயர்வு ஆகிய அனைத்தையும் தாண்டி காரட் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உற்பத்தி செலவு காரட் அறுவடை கூலி கழுவி சுத்தம் செய்யும் செலவு போக்குவரத்து செலவு மூட்டை ஏற்றி இறக்கும் கூலி மண்டி கமிஷன் ஆகியவற்றிற்கு அசல் ஆக ரூபாய் 40 ற்கும் மேல் ஆகிறது அதையும் மீறி வட்டிக்கு கடன் பெற்று விவசாயம் செய்பவர்களின் நிலைமை சொல்லி மாளாது
நீலகிரி மாவட்டத்தின் மண்ணின் தன்மை நீரின் சுவை காற்று மாசற்ற சூழலால் தூய்மையான மழைநீர் இயற்கை உரங்களின் பயன்பாடு தோட்டக்கலைத்துறையினரின் உதவியுடன் இயற்கை முறையில் பூச்சிவிரட்டி உட்பட விவசாயிகளின் தீவிர கண்காணிப்பில் காரட் விவசாயம் நடைபெற்று வந்தது
இப்படி சிறப்பான முறையில் விளைந்த காரட் பார்த்தவுடன் சாப்பிடக்கூடிய வகையில் இருந்ததுடன் ஊட்டச்சத்து மிகுந்ததாக இருந்ததினால் அனைத்து மாவட்ட மக்களால் விரும்பி வாங்கப்பட்டதால் கேரட் விலை கிலோ ரூபாய் 100 வரை சென்றது இதனால் விவசாயிகள் சிறிதளவு லாபம் அடைந்து கேரட் விவசாயத்தை அதிக வட்டிக்கு வாங்கி தொடர்ந்த நிலையில் திடீரென ரூபாய் 10 க்கு கீழ் விலை வீழ்ச்சியால் அதிக நஷ்ட்டமடைந்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர் விவசாயம் செய்ய பெற்ற கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தினறினர்
தரமான கேரட்விளைவித்தும் கொள்முதல் விலை கூட கிடைக்காததினால் விவசாயிகள் இதை பற்றி ஆராய்ந்த போது திடுக்கிடும் தகவல் கிடைத்தது.
சில வியாபாரிகள் மட்டும் டில்லி மற்றும் பெங்களூரிலிருந்து கேரட்களை நீலகிரிக்கு கொண்டுவந்து கேரட்கழுவும் இடத்தில் நீலகிரி கேரட் உடன் கலந்து விஞ்ஞான ஊழல் முறையில் வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி சில வியாபாரிகள் மட்டும் கொள்ளை லாபம் பார்த்து நீலகிரி மாவட்ட கேரட் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் விளையாடியதால் கொள்முதல் விலை கூட கிடைக்காத விவசாயிகள் தினறினர்
இதைப்பற்றி கலந்தாலோசித்து தடுக்க வருகின்ற 15.11.2023 புதன்கிழமையன்று காலை 11 மணிக்கு ஊட்டி சேரிங்கிராஸில். உள்ள தோட்டக்கலைத்துறை காம்ப்ளக்ஸில் ஆலோசனை கூட்டத்திற்க்கு விவசாயிகள் நல சங்கத்தின் சார்பில் இளித்துரை என்.விஸ்வநாதன் அவர்களால் அழைப்பு விடுத்ததுடன் 97874 00567 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என கூறியுள்ளார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment