கூடலூரில் தமிழ்நாடு காவல்துறை சார்பாக கிராம விழிப்புணர்வு கூட்டம் முதல்முறையாக நீலகிரி மாவட்டத்தில் நடத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தொரப்பள்ளி பகுதியில் நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவடிவேலு தலைமையில் தமிழ்நாடு காவல்துறை சார்பாக கிராம விழிப்புணர்வு கூட்டம் இன்று நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் கூடலூர் டிஎஸ்பி செல்வராஜ் மற்றும் தேவாலா டிஎஸ்பி செந்தில்குமார் கூடலூர் வனவிலங்கு பாதுகாவலர் கொம்பு ஓங்காரம் மற்றும் ஓவேலி பேரூராட்சி தலைவி சித்ராதேவி மற்றும் சகாதேவன் முன்னாள் நகரச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவ வடிவேலு பேசுகையில் நீலகிரி மாவட்டத்தில் முதல் முறையாக கூடலூர் பகுதியில் கிராம விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படுவதாகவும் இதே போல் மாவட்ட முழுவதும் அனைத்து பகுதிகளிலும் கூட்டம் நடத்தப்படும் என்றும் இந்த கூட்டமானது காவல்துறை பொதுமக்கள் இடையே நல் உறவை ஏற்படுத்தி குற்ற செயல்கள் நடைபெறாத வண்ணம் காவல்துறைக்கு பொதுமக்கள் உதவியாக இருக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு காவலர்களுக்கும் கிராமங்கள் பிரித்து கொடுக்கப்படும் என்றும் அவர்களது கைபேசி எண்கள் அனைத்து கிராம மக்களிடம் வழங்கப்படும் என்றும் கிராமப் பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடைபெறும் சமயம் குற்றவாளிகளுக்கு துணை நிற்காமல் குற்றங்களை தடுக்க காவல்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு கிராம மக்களிடமும் அந்த கிராமத்தின் பொறுப்பாளர்கள் இருப்பார்கள் என்றும் அவர்களிடம் காவல்துறையை சார்ந்த எஸ்பி டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியது கைபேசி எண்கள் வழங்கப்பட்டிருக்கும் அதை பயன்படுத்தி குற்றங்கள் நடக்கும் சமயத்தில் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் நம் ஒன்றிணைந்து செயல்பட்டால் குற்றமே இல்லாத மாவட்டமாக மாற்றலாம் என்றும் அதற்காக பொதுமக்கள் உதவிடுமாறு கேட்டுக் கொண்டார் இந்நிகழ்ச்சியில் கூடலூர் பகுதியை சேர்ந்த பல கிராம தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....
No comments:
Post a Comment