நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையும் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையும் சமவெளிப்பகுதிகளை இணைக்கும் முக்கியமான சாலைகளாகும் மாற்று வழியாக கெத்தைசாலை மிகவும் குறுகளாகவும் ஆபத்து நிறைந்ததாகவும் உள்ளது நவம்பர் மாதம் என்றாலே ஊட்டி குன்னூர் பர்லியார் மேட்டுப்பாளையம் சாலை பழுதடைவதும் ஊட்டியில் இருந்து வரும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக சமவெளிபகுதிக்கு மாற்று பாதையில் செல்வதும் ஒவ்வொரு வருடமும் தொடர்கதை நிகழ்வாகும்
இத்தனை ஆண்டுகளாக கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையை அதிக வாகனங்கள் பயண்படுத்தியதினாலும் கடந்த மே 8 ஆம் தேதி இரவு தமிழகத்திலேயே கோத்தகிரியில் அதிக மழை பெய்ததால் நிலச்சரிவு ஏற்பட்டது மே 9 ம்தேதி பேரிடர் மீட்புப் படையினர் போர்க்கால அடிப்படையில் நிலச்சரிவு பகுதியை சீரமைத்து போக்குவரத்து நடைபெறுகிறது இன்றும் கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் நிலச்சரிவும் மற்றும் ஒரு இடத்தில் பாறைகள் சரிந்து வந்துள்ளது உடனடியாக சீரமைக்கப்பட்டது
கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் தினமும் நிலச்சரிவு ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்தில் பயணித்து வருகின்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment