பந்தலுரை அடுத்துள்ள உப்பட்டி பகுதியில் அமைந்திருக்க கூடிய பாரத் மாதா மேல்நிலைப் பள்ளியின் 75வது ஆண்டு விழா மற்றும் பவள விழா தொடக்க விழா நடைபெற்றது இதில் மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 26 November 2023

பந்தலுரை அடுத்துள்ள உப்பட்டி பகுதியில் அமைந்திருக்க கூடிய பாரத் மாதா மேல்நிலைப் பள்ளியின் 75வது ஆண்டு விழா மற்றும் பவள விழா தொடக்க விழா நடைபெற்றது இதில் மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்


 பந்தலுரை அடுத்துள்ள உப்பட்டி பகுதியில் அமைந்திருக்க கூடிய பாரத் மாதா மேல்நிலைப் பள்ளியின் 75வது ஆண்டு விழா மற்றும் பவள விழா தொடக்க விழா நடைபெற்றது இதில் மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்

பந்தலூரை அடுத்துள்ள உப்பட்டி அமைந்திருக்க கூடிய பாரத் மாதா மேல்நிலைப்பள்ளியில் 75 ஆம் ஆண்டு ஆண்டு விழா பவள விழா மற்றும் தொடக்க விழா மிக சிறப்பான முறையில் நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் பத்தேரி மறைமாவட்ட ஆயர் மற்றும் பள்ளி மேலாளர் டாக்டர் ஜோசப் மார் தாமஸ் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

 இதில் முதல் நிகழ்ச்சியாக உப்பட்டி மெயின் பஜாரில் இருந்து சென்டை மேளம் முழங்க பேரணி துவங்கி முக்கிய வீதி வழியாக பாரத் மாதா மேல்நிலைப்பள்ளி வளாகம் வந்து சேர்ந்தது .பின்பு ஆயர் ஜோசப் மார் தாமஸ் அவர்கள் 75 ஆம் ஆண்டு தீப மேடையில் ஒளி ஏற்றி வைத்து  பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது  அதனைத் தொடர்ந்து விழா மேடையில் நிகழ்ச்சி துவங்கியது ..



இந்த நிகழ்ச்சியில் ஆண்டறிக்கை திரு கணேசன் மால் உதவி தலைமை ஆசிரியர் வாசித்தார் நிகழ்ச்சிக்கு வந்தவர்களை தலைமை ஆசிரியர் பிஜு ஜோசப் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்..‌.



 அருள் தந்தை டாக்டர் மாத்யூ காரிய வள்ளீல் அவர்கள்  தொடக்க உரையை  நிகழ்த்தினார் ..தலைமை உரை மற்றும் பவள விழா தொடக்க உறையாக டாக்டர் ஜோசப் மார் தாமஸ் பத்தேரி மறைமாவட்ட  ஆயர் மற்றும் பள்ளி மேலாளர் அவர்கள் உரையாற்றினார்..



 அதனை தொடர்ந்து பவள விழா பாடல் பள்ளி மாணவர் குழு பாடினார்கள் அதனைத் தொடர்ந்து ஆண்டு விழா தொடக்கம் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன் உரையாற்றினார். பவள விழா சின்னம் வெளியிட்டவர் நெல்லியால நகர மன்ற தலைவர் திருமதி சிவகாமி அதனைத் தொடர்ந்து பிரிவு உபசார விழா மற்றும் புதிதாக பொறுப்பேற்கும் பள்ளி தாளாளர்களை கௌரவித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது .



இந்த நிகழ்ச்சியில் முன்னாள் தலைமை ஆசிரியர் மத்தாய். பி டி ஏ தலைவர் ஸ்டாலின். முன்னாள் தலைமை ஆசிரியர் எம் கே கீவர்கீஸ். எம் எஸ்.எஸ்  பள்ளி தாளாளர்  ஆலி முன்னாள் தலைமை ஆசிரியர் விபி தாமஸ் .உப்பட்டி வியாபார சங்கத் தலைவர் கணேசன். பி டி ஏ துணை தலைவர் உமர் .இருபதாம் வார்டு உறுப்பினர் ஸ்ரீகலா. முன்னாள் பீடியே தலைவர் ராமகிருஷ்ணன் .மாணவர் பிரதிநிதி மயூரா ஸ்ரீ .மற்றும்.பள்ளி பணியாளர்கள்  பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்..



டாக்டர் ஜோசப் மார் தாமஸ் பத்தேரி மதுரை மாவட்ட ஆயர்  பேசுகையில்.தமிழகத்திலேயே அதுவும் நீலகிரி மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக பாரத்மாத மேல்நிலைப்பள்ளி திகல்ந்து வருகிறது .நம்ம ஊரில் இந்த பள்ளியை விசாரித்தால் பைன் என்றுதா சொல்கிறார்கள்.இங்கு பயிலும் மாணவர்கள் திறமையானவர்கள் காரணம் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வெற்றியடைகின்றனர்.இதற்கு காரணம் ஆசிரியர்கள் அவர்களுக்கு விளையாட்டு கல்வி போன்றவற்றில் அதிக கவணத்தை செலுத்த வைத்து அவர்களை வெற்றி பெற செய்கின்றனர்.



 நம் மாணவர்கள்  மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் சென்று விளையாடி பல பரிசு பெருகின்றனர் அது போல கல்வியிலும் பல வளர்ச்சிகள் தங்களின் கண்டு பிடிப்புகள் பல போட்டிகளில் கலந்து பரிசு பெருவது சான்றிதழ் பெருவது போன்றவற்றில் சாதனை புரிகின்றனர். என்றார் இப்பேர் பட்ட பள்ளியின் விழாவில் கலந்து கொண்டது எனக்கு பெரும் மகிழ்ச்சி என்று பெருமிதம் கொண்டார்..



இந்த நிகழ்ச்சியில் நெல்லியாள நகரமன்ற தலைவரும் முன்னால் மாணவருமாகிய சிவகாமி பேசுகையில்  படிப்பு ஒரு மனித வாழ்க்கையில் மிக முக்கியம் என்என்றால் படிப்பு தான் ஒரு மனிதனின் வாழ்க்கை மேம்படுத்தும்  நான் இங்கு படித்ததினால் தான் நான் உங்கள் முன் சிறப்பு விருந்தாளியாக வரவழைக்கப்பட்டுள்ளேன் உங்கள் முன் பேச வந்துள்ளேன் என்றார்.



நான் படித்ததால் தான் தளபதியார் அவர்கள் என்னை தேர்ந்தெடுத்து தேர்தலில் நின்று உங்கள் ஆதர்வாலும் எங்கள் முக்கிய தலைவர்களின் ஆதரவோடு  பதவி வகுக்கிறேன்.இந்த அரசு படிப்பிற்கு என்னற்ற உதவி செய்து வருகிறது என்றார்.. மேலும் கூடலூர் சட்ட யன்ற உறுப்பினர். பொன்ஜேயசீலன்  அவர்கள் பேசுகையில்  படிப்பு ஒரு மனிதனை  வாழ்க்கையில் உயர்த்துகிறது படிப்பை நாம் எக்காரணத்தைக் கொண்டும் கைவிடக்கூடாது.படிப்பை தொடர வேண்டும் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் நம் படித்து நம் ஊருக்கு பள்ளிக்கு பெற்றோருக்கும் பெருமை தேடி தர வேண்டும் கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் மதிப்பு இதனை உணர வேண்டும்.



நாம் படிப்பதினால்  நம் விழ்க்கை செலிப்படையும் நம் பலருக்கு உதவ முடியும் என்றார் இந்த காலக் கட்டத்தில் படிப்பை தவிர பெரிய சொத்து எதுவும் இருக்க முடியாது என்றார் நான் ஒரு விவசாயின் மகன் எனது தந்தை கஸ்டப்பட்டு படிக்க வைத்தார் இப்போ நான் நல்லமுறையில் வாழ்ந்து உங்களிடையே ஒரு சட்டமன்ற உறுப்பினராக உங்கள் முன் நிற்கின்றேன் என்றார்..இறுதியாக பள்ளி மாணவர்களின் பேச்சு ..கலைநிகழ்ச்சி  நடை பெற்றது. இறுதியாக  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பாபு அவர்கள் நன்றியுரை கூறின் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad