கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கேபிடிஎல் பவுண்டேஷன், ஆல் த சில்ரன் ஒயிட் அரோ டிரஸ்ட் நீலகிரி உதவும் கரங்கள் ஆகியன இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் கரியசோலை அரசு உயர்நிலை பள்ளியில் நடைபெற்றது. ஆல் த சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் தலைமை தாங்கினார். நீலகிரி உதவும் கரங்கள் அமைப்பு நிர்வாகிகள் சாரதா, முன்னிலை வகித்தனர். கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் முகாமினை துவக்கி வைத்தார்.
உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ குழுவினர் அந்தோனியமமாள், ராகுல் உள்ளிட்டோர் கண் பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர். முகாமில் 50க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.
10 பேர் கண்புரை அவருவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment