பந்தலூர் சேரங்கோடு அடுத்துள்ள படச்சேரி கிராம பகுதியில் கிராமசபை கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது இந்த கூட்டத்தில் மிக அதிகளவு பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்...
சேரங்கோடு அடுத்துள்ள படச்சேரி பகுதியில் உள்ளாட்சி தினந்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடை பெற்றது . இதனை தொடர்ந்து கூட்டத்திற்கு சேரங்கோடு பஞ்சாயத்து தலைவி லில்லிஏலீயாஸ் தலைமை தாங்கினார் நிகழ்வில் சேரங்கோடு பஞ்சாயத்து துனை தலைவர் சந்திரபோஸ் .செயலாளர் சஜித்.மாவட்ட ஊராட்சி ஒன்றி உறுப்பினர் அனிபா .பஞ்சாயத்து யூனியன் உறுப்பினர் தாமோதிரன்.வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் . ஆசா பணியாளர்கள் கொளப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையமருத்துவர் கவிமதி அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் பொது மக்கள் கலந்துக்கொண்டனர்..
இந்த கூட்டத்தில் கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக பனியாற்றிய துப்புறவு பனியாளர்களை பாராட்டப்பட்டது இது போல் சுகாதார செவிலியார்கள் ஆசா பனியாளர்களை பாராட்டப்பட்டது.
கூட்ட துவக்க முலே அமைதிமாக நடை பெற்றது .சேரங்கோடு கிராம சபை பல்வேறு இடங்களில் நடை பெற்ற போது பெண்கள் குறைந்த அளவே கலந்துக் கொள்வார்கள் ஆனால் இந்த படச்சேரி கிராம சபையில் கூட்டத்தில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவு கலந்துக்கொண்டனர். கூட்டத்த்தில் பல்வேறு குறைகளை பேசிய போது எந்த வித ஆர்பாட்டமோ கூகுரலோ எழப்ப வில்லை இறுதி வரை அமைதியாகவே நடை பெற்றது
இந்த கூட்டத்தில் அப்பகுதி தன்னார்வளர் தேவா கூறுகையில் சிங்கோன மாரியம்மன் கோவில் வழியாக கொளப்பள்ளி செல்ல மினி பேருந்து வசதி வேண்டும் காரணம் மாலை நேரம் பள்ளி கல்லூரிக்கு சென்று வரும் மாணவர்கள் தாமத மாக வீடு திருப்புகின்றனர்.அது போல் கூலி வேலைக்கு சென்று வருபவர்களுக்கும் சிறமம் யானை கலாட்டா உள்ளது எனவும். கிராம புரங்களில் யானை தொல்லை .தெரு விளக்கு எறியாதது .சாலை வசதி. குடிநீர் வசதி அங்கன் வாடிக்கு மின் . விளக்கு நூலகத்திற்கு மேற்கூரை சீர்படுத்துதல். தெரு விளக்கு இல்லாத பகுதிக்கு தெருவிளக்கு அமைத்தல் போன்ற குறை பாடுகளை செய்து தர வேண்டும்.. தடுப்பு சுவர் கழிவு நீர் கால்வாய் போன்றவை அமைத்து தர வேண்டும் என்றார் இதை பஞ்சாயத்து தலைவரும் துனை தலைவரும் ஏற்றுக் கொண்டு பதிவேட்டு தீர்மானத்தில் சேர்க்கப்பட்டது..
மேலும் கூட்டத்தில் சேரங்கோடு வளர்ச்சி குழ சார்பாக ரவி கூறுகையில் எங்க ஊர் சூப்பரு எருமாடு பஸ்டாப்பு வெரி சூப்பரு சேரங்கோடு பஸ்டாப்போ குப்பமேடு என பேச துவங்கினார். எங்கள் ஊரில் அடிப்படையான சிங்கோனாவில் உள்ள ஆரம்ப துனை சுகாதார நிலையத்தை சேரங்கோட்டில் கட்ட வேண்டும். நூலகத்தில் மேற் கூரை சீர் படுத்த வேண்டும் தெரு விளக்கு அதிக ஒளி தரக்கூடிய விளக்கு பொருத்தபட வேண்டும். தங்குதடை இன்றி குடிநீர் குடி நீர் இனைப்பு வழங்காத இடங்களில் குடிநீர் இனைப்பு அமைக்கப்பட வேண்டும் .சேரங்கோடு பள்ளியை சுற்றி உள்ள காடுகளை அகற்றப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார் இதை பஞ்சாயத்து துனை தலைவர் சந்திர போஸ் இந்த நிபந்தனைகளை தீர்மான பதிவேற்றில் ஏற்றுக் கொண்டார்..
இந்த கூட்டமானது இந்திய சுதந்திரம் அடைந்து.1998.ல் ஊராட்சியாக அறிவிக்கப்பட்டு முதன்முறையாக சேரங்கோடு பஞ்சாயத்து கிராம சபை படச்சேரி கிராமத்தில் நடை பெற்றது என்பது குறிப்பிட தக்கது..இறுதியாக சேரங்கோடு பஞ்சாயத்து துனை தலைவர் சந்திரபோஸ் நன்றி கூறினார்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment