பந்தலூர் அருகே கரியசோலை அரசு உயர்நிலை பள்ளியில் அயோடின் பற்றாகுறை தடுப்பு தினத்தை முன்னிட்டு அயோடின் உப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் புளோரகுளோரி தலைமை தாங்கினார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது ஏற்கனவே இயற்கையாக கிடைத்து வந்த அயோடின் நுண்ணூட்ட சத்து தற்போது இயற்கை சீற்றம் உள்ளிட்டவை காரணமாக குறைபாடு ஏற்பட்டு இதனால் அயோடின் பற்றாக்குறை ஏற்பட்டது அயோடின் பற்றாக்குறை காரணமாக உடலுக்கு பாதிப்புகள் ஏற்படுகிறது ஹைப்பர் தைராய்டு, ஹைப்போ தைராய்டு ஆகிய குறைபாடுகள் ஏற்படுகிறது. அயோடின் குறைபாட்டினால் முன் கழுத்து கழலை பிட்யூட்டரி சுரப்பியில் பாதிப்புகள் ஏற்படுவதோடு பெண்களுக்கு மாதவிடாய் சார்ந்த பிரச்சினைகள் அதிகமாக ஏற்படுகிறது உடல் வளர்ச்சி மன வளர்ச்சி பாதிக்கப்பட்டு மந்த தன்மை ஏற்படுகிறது எனவே அயோடின் கலந்த உப்பினை முறையாக எடுத்துக் கொள்வதன் மூலம் அயோடின் பற்றாக்குறையினால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க முடியும். அயோடின் விற்பனை குறித்து கள ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு அயோடின் கலக்காத உப்பு உற்பத்தி நிறுவனங்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் போலியாக அயோடின் கலக்காத உப்பு விற்பனை செய்யபடுகிறது என்றார்.
பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் மணிவாசகம் பேசும்போது அயோடின் கலந்து உப்புகளை தேர்வு செய்து வாங்க வேண்டும். வாங்கிய உப்பில் சாதம் வடித்த நீரில் உப்பு போட்டு எலுமிச்சை சாறு விட்டால் கலர் மாறும் அதுபோல உருளை கிழங்கின் சாறு எடுத்து உப்பில் உப்பு போட்டு அதனுடன் எலுமிச்ச சாறு விட்டால் நிறம் மாறும் இதனடிப்படையில் அயோடின் உள்ளதா என அறியலாம். அரசு மூலம் விற்பனை செய்யப்படும் உப்பில் முழுமையான அயோடின் உள்ளத்தால் அதனை வாங்கி பயன்படுத்தலாம் என்றார்.
தொடர்ந்து கடைகளில் வாங்கிய உப்புகளில் அயோடின் குறித்து சோதனை செய்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment