தமிழ்நாடு- கேரள மாநில எல்லையில் அமைந்திருக்கும் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில் இன்று காலை கேரள மாநில தண்டர்போல்ட் சிறப்பு குழுவிற்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்துள்ளது.
இதனை ஒட்டி தமிழக- கேரள மாநில எல்லையில் அமைந்திருக்கும் சோதனை சாவடிகள் மற்றும் வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதியில் அமைந்திருக்கும் ஓவேலி சோதனை சாவடி ஆகியவற்றை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுந்தரவடிவேல் அவர்கள் நேரில் பார்வையிட்டு அங்கு பணியில் இருக்கும் காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment