மீலாது விழாவை முன்னிட்டு நோயாளிகளை நலம் விசாரித்து உணவு வழங்கினர்
இஸ்லாமிய இளைஞர்களின் ஒரு அமைப்பான சுன்னத் ஜமாத் மாணவர் அமைப்பு (SSF) பல சமூக சேவைகளில் ஈடுபட்டும் மாணவர்களுடைய கல்வி வளர்ச்சியிலும் ஈடுபட்டு வருகிறார்கள் அதில் ஒரு பங்கான அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் புசிப்பவன் உண்மையான இறை விசுவாசி அல்ல என்றும் நோயாளிகளை நலம் விசாரியுங்கள் என்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன வார்த்தையை கடைபிடிக்க வேண்டும் என நேற்றைய தினம் நபிகள் நாயகம் பிறந்த மீலாது தினத்தை முன்னிட்டு உதகையில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் அரசு சேட் மருத்துவமனை ஆகிய இரண்டு மருத்துவமனைகளிலும் நோயாளிகளை கண்டு நலம் விசாரிக்கப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கினார்கள் இத்திட்டத்தின் கீழ் அனைத்து நோயாளிகளும் பயன்பெற்றார்கள் இந்நிகழ்வில் ஒத்துழைப்பை கொடுத்த அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்கள் இந்நிகழ்வில் இந்தியா தேசிய நிர்வாகத்தை சேர்ந்த இம்ரான் ஸகாபி மற்றும் நீலகிரி மாவட்ட சுன்னத் ஜமாத் மாணவர் அமைப்பு நிர்வாகத்தினுடைய தலைவர் சஃப்வான் அமானி செயலாளர் முஸ்தபா எமரால்டு மற்றும் SSF இன் செயல்வீரர்கள் கலந்துகொண்டு ஆர்வத்துடன் செயலாற்றினார்கள். இதே போல சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் SSF-ன் சார்பாக 270 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து உணவு வழங்கப் பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தமிழக ஒருங்கிணைப்பாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment