பந்தலூர் தாலுக்காவிற்கு உட் பட்ட எருமாடு மணலி பகுதியில் புலி தாக்கி ஆடு காயம் மக்கள் பீதி..
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி சேரங்கோடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் கூடலூர் தாலுகா பாடந்துறை, தேவர்சோலை உள்ளிட்ட பகுதிகளிலும் புலி சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மாலை 3 மணிக்கு சேரம்பாடி அருகே மணலி பகுதியில் ஆட்டின் சப்தம் கேட்டுள்ளது அப்போது பொதுமக்கள் சிலர் பார்த்தபோது புலி அங்கிருந்து ஓடி உள்ளது பின் ஆட்டின் அருகே சென்று பார்த்த போது புலி தாக்கியதில் ஆடு காயமடைந்தது தெரியவந்தது பின்னர் ஆட்டை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இன்னிலை பல முறை வனத்துறையினரிடம் இப்பகுதியில் கூன்டு வைத்து புலியை பிடிக்க மனு கொடுத்தும் பயன் இல்லை வனத்துறை அலட்சிய போக்கில் உள்ளனர்.மனிதர்களை தாக்கிய பிறகு தான் கூன்டு வைப்பார்களா என கேள்வி எழந்துள்ளது...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment