நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு அருகே உள்ள சிவசக்தி நகர் பகுதியில் குளவியின் கோரத்தாண்டவத்திற்கு கணவன் பலி மனைவி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு அருகாமையில் உள்ள சிவசக்தி நகர் பகுதியில் மலையரசன் எனும் சுந்தர்ராஜ் மற்றும் அவரது துணைவியார் ராஜேஸ்வரி ஆகிய இருவரும் காலையில் தோட்டத்தில் கூலி வேலைக்கு சென்றுள்ளனர் அங்கு செல்லும் வழியில் எதிர்பாராத விதமாக வனப்பகுதியில் இருந்து வந்த குளவி என்னும் ஒரு வகை பூச்சி நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் பறந்து வந்துள்ளது இந்த குளவி பூச்சிகள் அவர்களை தாக்கியது இந்த குளவி பூச்சியின் கொடூர தாண்டவத்தில் சிக்கிய மலையரசன் என்னும் சுந்தர்ராஜ் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் அவரது உடல் அருகில் உள்ள மஞ்சூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது அவரது துணைவியார் ராஜேஸ்வரி உதகை அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த குளவி பூச்சி என்பது ஹிம்னோட்பெரா வகுப்பைச் சார்ந்த ஒரு வகை பூச்சியினம் ஆகும் இவை தேனியுமில்லாத எறும்பும்மில்லாத அபோக்ரிட்டா எனும் துணை வரிசையில் சேர்ந்தவை 12 முதல் 13 வரை உணர்கொம்புகள் உள்ளது இதன் வால் முனைப்பகுதிகளில் பெண் குளவிகளுக்கு விஷக் கொடுக்குகள் உள்ளன இந்த விஷக் கொடுக்குகளைக் கொண்டு நம்மை கடித்துவிட்டால் தாங்க முடியாத வலி உண்டாகும் ஒருவித எரிச்சலுடன் கூடிய வலி, கொட்டிய இடத்தின் மத்தியில் வெள்ளை நிற திட்டு கொட்டிய இடம் வீங்குதல் போன்ற அறிகுறிகள் நமக்கு அதிக வலியை உண்டாக்கும் அதிலும் நூற்றுக்கணக்கான குளவிகள் ஒன்றாக சேர்ந்து கொட்டினால் அவை உண்டாக்கும் வலி கொடூரத்தின் உச்சம் அப்படிப்பட்ட குளவியின் கோரத்தாண்டவத்தில் இன்றைய தினத்தில் மலையரசன் என்று அழைக்கப்படும் சுந்தர்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தமிழக ஒருங்கிணைப்பாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment