கோத்தகிரியில் தனது கள்ளக் காதலான கோவில் பூசாரியை வீட்டிற்கு அழைத்து அடித்து கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற பெண் உள்பட 2 பேரைப் போலீசார் மேட்டுப்பாளையத்தில் கைது செய்தனர். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 25 October 2023

கோத்தகிரியில் தனது கள்ளக் காதலான கோவில் பூசாரியை வீட்டிற்கு அழைத்து அடித்து கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற பெண் உள்பட 2 பேரைப் போலீசார் மேட்டுப்பாளையத்தில் கைது செய்தனர்.


கோத்தகிரியில் தனது கள்ளக் காதலான கோவில் பூசாரியை வீட்டிற்கு அழைத்து அடித்து கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற பெண் உள்பட 2 பேரைப் போலீசார் மேட்டுப்பாளையத்தில் கைது செய்தனர்.

கோத்தகிரி அருகே உள்ள ரோஸ் காட்டேஜ் பகுதியை சேர்ந்த சுப்ரமணி என்பவரது மகன் மாரிமுத்து(வயது 44). இவருக்கு திருமணமாகி வினோதா என்கிற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர் கடந்த பல வருடங்களாக கோத்தகிரி கடைவீதியில் உள்ள பிரசித்திப் பெற்ற மாரியம்மன் கோவிலில் பூசாரியாக பணியாற்றி வந்தார். மேலும் திருமணம், வீடு திறப்புவிழா உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்கு சென்று சுப நிகழ்ச்சிகளை நடத்திக் கொடுப்பது வழக்கம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை 6 மணிக்கு அவருக்கு தொலைபேசியில் அழைப்பு வந்துள்ளது. உடனடியாக அவர் தனது மனைவியிடம் கோத்தகிரி டானிங்டன் பகுதியில் உள்ள ஒரு  வீட்டில் பூஜைக்கு செல்ல வேண்டும் என தனது வீட்டில் சொல்லிவிட்டு தன்னுடைய ஸ்கூட்டரில் சென்றுள்ளார். இரவு 10 மணியாகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தார் அவரைத் தேடிப்பார்த்துள்ளனர். மேலும் அவரது மொபைல் போன் ஆப் செய்யப்பட்டிருந்ததால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. கோத்தகிரி கோவில்மேடு பகுதியில் உள்ள படிக்கட்டில் ஒருவர் இரத்த காயங்களுடன் இறந்து கிற்பபதைக் கண்ட அப்பகுதி மக்கள் கோத்தகிரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், மனோகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது பூசாரி மாரிமுத்து இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். ஒரு வேளை மாரிமுத்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்கிற சந்தேகத்தில் உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். மேலும் தடயவியல் நிபுணர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மாவட்ட எஸ்.பி சுந்தர வடிவேல், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சவுந்திரராஜன், குன்னூர் துணை சூப்பிரண்டு குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் குமரேசன், ஜெய்சன் ஆகியோர் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். பின்னர் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. நாய் மாரிமுத்து இறந்து கிடந்த இடத்தில் இருந்து பஸ் நிலையம் வரை சென்று நின்றது. எனவே கொலையாளிகள் பஸ்ஸில் தப்பிச் சென்று இருக்கலாம் என தெரிய வந்தது. மேலும் பூசாரி இறந்து கிடந்த இடத்திற்கு அருகே உள்ள 3 வீடுகள் பூட்டியிருந்தன. 2 வீட்டில் குடியிருப்பவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் தனியாக  பெண் ஒருவர் இருந்த வீடு பூட்டப்பட்டு இருந்ததால் அந்த வீட்டின் பூட்டை உடைத்து போலீசார் சோதனை செய்தனர். மேலும் போலீசாரின் விசாரணையில் அந்த பெண்ணின் வீட்டிற்கு மாரிமுத்து  பூசாரி அடிக்கடி வந்து செல்வதும், அவர்களுக்கு இடையே தவறான தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. எனவே அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை அந்தப் பெண் கொலை செய்திருக்கலாம் என்கிற சந்தேகத்தில் போலீசார் அந்த பெண்ணின் செல்போன் எண்ணை வைத்துத் தேடத் தொடங்கினர். பின்னர் அவரையும், அவருடன் இருந்த உதயகுமார் என்பவரையும் மேட்டுப்பாளையத்தில் நின்றுக் கொண்டிருந்தபோது நேற்று மாலை போலீசார் கைது செய்தனர். அந்தப் பெண் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாவது.

கோத்தகிரி சிவா காட்டேஜ் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகள் தனலட்சுமி(வயது 25). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் முரளி என்பவர் தனலட்சுமியின் நடத்தை சரியில்லாததால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். குழந்தைகளை தனது தந்தையிடம் விட்டு தனலட்சுமி கோவில் மேடு பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். இவர் இரண்டாவதாக தர்மராஜ் என்பவரை திருமணம் செய்து 3 வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது.  இவருக்கு மாரிமுத்து மட்டுமின்றி கோத்தகிரி பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்த உதயகுமார்(37) என்பவருடனும் தொடர்பு இருந்துள்ளதாகவும், மேலும் அவருக்கு பல ஆண் நண்பர்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் பூஜைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற பூசாரி மாரிமுத்து தனலட்சுமியின் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். அப்போது இரவு சுமார் 10 மணிக்கு உதயகுமாரும் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் தனலட்சுமி மாரிமுத்துவுடன் இருப்பதைக் கண்டு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தனலட்சுமி மற்றும் உதயகுமார் இருவரும் சேர்ந்து மாரிமுத்துவை அடித்து, வீட்டை விட்டு வெளியே கொண்டு வந்து தாழ்வாக உள்ள படிக்கட்டில் தள்ளி விட்டுள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் வீட்டிலேயே இருந்து காலை 6 மணிக்கு எழுந்து எதுவும் நடக்காதது போல மேட்டுப்பாளையம் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். மேட்டுப்பாளையத்தில் நின்றுக் கொண்டிருக்கும் போது போலீசார் தங்களை கைது செய்து விட்டதாக அவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கோத்தகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad