நீலகிரி பாரளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, பேருந்து விபத்து நடந்த இடத்தில், விபத்து குறித்து குன்னூர் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் திரு. முனீஸ்வரன் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
குன்னூர் மரப்பாலம் சுற்றுலா பேருந்து விபத்தில் படுகாயம் அடைந்து உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு திமுக சார்பில் நீலகிரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா நிவாரணத் தொகை வழங்கி ஆறுதல் கூறினார்...
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நேற்று மாலை சுற்றுலா பேருந்து கவிழ்ந்து 9 பேர் உயிரிழந்த நிலையில் 36 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு குன்னூர் லாலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதேபோல் இவ்விபத்தில் பலத்த காயமடைந்து இருவர் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் நேரில் சந்தித்து தமிழக அரசு அறிவித்த நிவாரண தொகையை வழங்கினர்.
இந்நிலையில் திமுக துணை பொதுச்செயலாளரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா இன்று மாலை பேருந்து கவிழ்ந்த சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட அவர் உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு திமுக சார்பில் நிவாரண தொகை வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது திமுகவின் நீலகிரி மாவட்ட செயலாளர் பா.மு முபாரக் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா, மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார் ,தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தமிழக ஒருங்கிணைப்பாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment