தாளூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கால்பந்து போட்டி
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் மாணவ மாணவிகளின் திறமையை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து வருகின்றனர். அந்த வகையில் பந்தலூரை அடுத்துள்ள பாரதியார் பல்கலைக்கழகங்களுக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான கால்பந்தாட்ட போட்டி நடைபெற்று வருகின்றது. நான்கு மண்டலங்களாக பிரித்து நடைபெற்று வரும் நிலையில் நீலகிரி கோவை ஆகிய பகுதிகளில் உள்ள 23 கல்லூரிகளுக்கான போட்டி தாளூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இன்று துவங்கி இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதி போட்டி நாளை நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் முதல் 2 அணிகளுடன் மற்ற மூன்று மண்டலங்களில் முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணிகளுக்கு இறுதி போட்டி நடத்தபட்டு அதில் வெற்றி பெறும் அணி இந்த இரண்டு பாரதியார் பல்கலைக்கழகத்தில் கால்பந்து போட்டி வெற்றியாளராக அறிவிக்கபடும்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment