பந்தலூர் அரசு மருத்துவமனையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது
நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஆல் தி சில்ட்ரன் ஒயிட் ஆரா டிரஸ்ட், ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட், நீலகிரி உதவும் கரங்கள், மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகிய இணைந்து நடத்திய முகாமிற்கு
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சு. சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
ஆல் த சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜீத், மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌசாத், நுகர்வோர் மைய நிர்வாகி ராஜா, இந்திரஜித் ஏகம் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பந்தலூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் நாசிருதீன், சாதிக் அகமது ஆகியோர் முகாமினை துவக்கி வைத்தனர்.
உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினர் அந்தோணியம்மாள், ரகுபதி அஞ்சனாஸ்ரீ, அக்ஸந் அகமது ஆகியோர் கண் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் அளித்தனர்.
முகாமில் 200க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் பங்கேற்று சிகிச்சை பெற்றனர். இதில்
30 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு உதகை அரசு மருத்துவ கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
முகாமில் நீலகிரி உதவும் கரங்கள் அமைப்பு சாரதா தலைமையிலான நிர்வாகிகள், நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகிகள், காந்தி சேவை மைய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தமிழக ஒருங்கிணைப்பாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment