நீலகிரி மாவட்டம் உதகை முத்தோரை கீழ்கவ்வட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில், கலைஞரின் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது.
முகாமினை ஊர் பெரியவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தனர்.மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், இணை இயக்குனர் சுகாதார பணிகள் மரு. பாலசாமி அவர்களின் ஆலோசனையின் படி, வட்டார மருத்துவ அலுவலர் மரு. முருகேசன் தலைமையில் மரு. ஆஷா, மரு. நந்தகுமார், கண் மருத்துவர் அனுபமா, கிராம சுகாதார செவிலியர்கள், கீழ்கவ்வட்டி பள்ளி ஆசிரியர்கள், மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment