பர்லியார் சுற்றுலா பயணிகள் வாகன விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட *அப்துல் கலாம் கனவு அறக்கட்டளை மற்றும் ஆதரவற்றோர் இல்ல உறுப்பினர்கள்* அனைத்து முதல் நிலை மீட்பாளர்கள் அனைவருக்கும், வருவாய் துறை, காவல்துறை, தீயணைப்பு துறை, மருத்துவ துறை ஆகிய அனைத்து நபர்களுக்கும் முதல்கண் நன்றிகள்.
மிக விரைவாக செயல்பட்டு போக்குவரத்து நெரிசலை சரிசெய்தல் மற்றும் வாகன மீட்பு நடவடிக்கை ஆகிய கடினமான சூழ்நிலையிலும் நள்ளிரவு 1:30 மணி வரை அயராது பாடுபட்ட நம் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
அவர்களுடன் சேர்ந்து தமிழக குரல் இணையதள செய்தி குழுமத்தின் சார்பாகவும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவின் சார்பாகவும் மீட்பு பணியில் விரைவாக ஈடுபட்ட அனைத்து தன்னார்வலர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பொது மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் கிருஷ்ணா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment