எமரால்டு பகுதியில் மீலாது விழாவை முன்னிட்டு சுன்னத் ஜமாத் மாணவர் அமைப்பு சார்பாக புத்தகப் பை வழங்கப்பட்டது
1/09/2023 எமரால்டு பகுதியில் அமைந்திருக்கும் இஸ்லாமியர்களின் பள்ளிவாசலில் நபிகள் நாயகம் பிறந்த தினத்தை கொண்டாடும் விதமாக அனைத்து ஊர் பொதுமக்கள் எமரால்டு பகுதியில் உள்ள அனைத்து கோவில்களினுடைய நிர்வாகிகள் அன்னை வேளாங்கண்ணி திருக்கோவிலின் உடைய நிர்வாகிகள் போன்ற அனைத்து மத சகோதரர்களும் கலந்து கொண்டு நபிகள் நாயகம் பிறந்த தினமான மீலாது விழாவை மத நல்லிணக்கத்தோடு கொண்டாடினார்கள் இந்த எமரால்டு பகுதியில் எந்த ஒரு திருவிழாவாக இருந்தாலும் அனைத்து மதங்களும் இணைந்து ஒற்றுமையை வெளிப்படுத்தி கொண்டாடுவது வழக்கம் மதச்சார்பற்ற இப்பகுதியில் நடத்தப்பட்ட மீலாது விழாவில் இந்து மதத்தின் சார்பாகவும் கிறிஸ்தவ மதத்தின் சார்பாகவும் இஸ்லாமிய மதத்தின் சார்பாகவும் சொற்பொழிவுகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது அதனை தொடர்ந்து இஸ்லாமியர்களின் பாடசாலையான மதரஸா மாணவர்களுடைய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பங்கு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு விழா சிறப்பிக்கப்பட்டது இந்நிகழ்வில் சுன்னத் ஜமாத் மாணவர் அமைப்பின் மாவட்ட பொதுச் செயலாளர் முஸ்தபா அவர்கள் சிறப்புரையாற்றி மதரசாவில் பயின்று வரும் மாணவர்களுக்கு எமரால்டு கிளை SSF அமைப்பின் சார்பாக புத்தகப் பை வழங்கினார்கள் மாணவர்களுடைய கல்வி,ஒழுங்குமுறை, மாணவர்களை நேரான வழியில் வழி நடத்துவது மாணவர்களை தற்போதையிலிருந்து கலைஇலக்கியத்துடன் கொண்டு செல்வது இது போன்ற பல மாணவர்களுடைய சேவைகளில் ஈடுபட்டு வரும் இந்த அமைப்பிற்கு எங்களின் செய்தி பிரிவின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தமிழக ஒருங்கிணைப்பாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment