பந்தலூரை அடுத்துள்ள உப்பட்டி பெருங்கறை பகுதியில் அட்டகாசம் செய்து வந்த கரடிக்கு கூண்டு வைத்ததால் பொது மக்கள் நிம்மதி....
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா கொளப்பள்ளியை அடுத்துள்ள ஏலமன்னா பகுதியில் நேற்றைய தினம் இரவு 02 மணியளவில் கரடி உலா வந்துள்ளது. தொடர்ந்து ஏலமன்னா சாலையோரத்தில் உள்ள தெரேசா மேரி என்பவரது வீட்டு சமையல் அறையை உடைத்து பொருள்களையும் சேதப்படுத்தியுள்ளது.
காட்டு யானைகள் நடமாட்டத்தால் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ள நிலையில் தற்போது கரடியின் நடமாட்டமும் பொதுமக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது. இதனையடுத்து இன்று இரவு சிவக்குமார் என்பவரை கரடி தாக்கியது இதனை தொடர்ந்துநகர் திமுக கழக செயலாளர் சேகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முரளிதரன் போன்றோர் வனத்துறையினரிடம் பேசி கூண்டு வைக்க கேட்டதற்கினங்க இன்று பெருங்கரை குடியிருப்பு அருகே உள்ள காட்டினுள் கூண்டு வைக்க மூன்று கிலோமீட்டர் தூரம் காட்டினுள் கடந்து இந்த கூண்டு கொண்டு வரப்பட்டு குடியிருப்பு அருகே வைக்கப்பட்டு கரடிக்கு பிடித்த உணவு வைக்கப்பட்டது..
இந்த சம்பவத்தின் போது வனவர் பிலிப்.,வனகாப்பாளர் ராதாகிருஷ்ணன். வேட்டை தடுப்பு காவலர்கள்.நெல்லியாள நகராட்சி துனை தலைவர் நாகராஜ்.துணை அமைப்பாளர் பன்னீர் செல்வம், ஆசைத்தம்பி,செல்வகுமார், கிளை தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்ந்து கரடியை கண்காணிக்க வேட்டை தடுப்பு காவலர்கள் இரவு முழுவது கண்கானிப்பில் இ ருந்து வருகின்றனர்.....
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment