மண்வயல் பகுதியில் புலி தாக்கி இரண்டு ஆடுகள் உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் வனப்பகுதியாக உள்ளதால் காட்டு யானைகள், புலி சிறுத்தை கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டமும் அதிகரித்தே காணப்படுகிறது. இவ்வாறு வனப்பகுதியில் உலா வரும் வனவிலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதியிலும் நுழைந்து முகாமிட்டு வருகிறது. இதனால் மனித வனவிலங்கு மோதல் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. அந்த வகையில் கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி சிறுத்தை புலி உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து வளர்ப்பு கால்நடைகளை தாக்கி கொல்லும் தொடர் சம்பவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கூடலூரை அடுத்துள்ள மணல்வயல் பகுதியில் வசித்து வரும் ஜெய்சன் என்பவரது இரண்டு ஆடுகளை புலி தாக்கி கொன்று உள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்ற நிலையில் தற்போது நிவாரண தொகை வழங்குவதாகவும் அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருந்துவதாகவும் வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment