பந்தலூர் இரும்பு பாலம் பகுதியில் உலா வந்த காட்டு யானை: தொடர் போராட்டத்தில் பொதுமக்கள்
நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானைகள் முகாமிட்டு வருவதும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்று காலை 7 மணியளவில் இரும்புபாலம் பகுதியில் சிடி.8.புல்லட் ராஜா என்கிற இரண்டு காட்டு யானைகள் புகுந்தது. வனத்திற்குள் செல்ல வழி தெரியாமல் அங்கும் இங்கும் ஓடியது.
இன்னிலையில் அப்பகுதியில் இருந்த பொதுமக்களையும் விரட்டியது. மேலும் குடியிருப்பு பகுதியில் இருந்த 2 கார்களையும் சேதப்படுத்தியுள்ளது. தொடர்ந்து காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் பந்தலூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அவ்வழியாக பேருந்துகள் செல்லமுடியாமல் போக்குவரத்து பாதிக்கபட்டது. தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி வட்டாட்சியர் பிதீர்காடு ரேஞ்சர் ரவி பந்தலூர் ரேஞ்சர் சஞ்சீவி.ஓவேலி ரேஞ்சர் சுரேஷ் கூடலூர் ராதாகிருஷ்ணன். ஸ்கோடு ரேஞ்சர் எலியாஸ்வீரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த வித உடன்பாடும் ஏற்படாத நிலையில் கூடலூர் வன பாதுகாப்பு அலுவலர் வருகை தந்து பேச வேண்டும் யானையை பிடிக்க வேண்டும் என நிபத்தனை முன் வைத்து தற்போது தாசில்தார் அலுவலகம் செல்லும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இதற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. மேலும் பேருந்துகள் செல்ல மாற்று பாதை ஏற்படுத்தபட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment