பந்தலூர் அருகே இரும்பு பாலம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கட்ட கொம்பன் காட்டு யானை பொது மக்களை விரட்டியதால் பரபரப்பு உடனடியாக வனத்துறையினர் யானையை விரட்டியதால் பொதுமக்கள் உயிர் தப்பினர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கட்டக்கொம்பன், புல்லட் ராஜா என்கின்ற இரு ஆண் காட்டு யானைகள் கடந்த சில மாதங்களாக அப்பகுதிகளில் சுற்றித் திரிகிறது இந்த இரு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட கும்கி யானைகள் உதவியுடன் முப்பதுக்கு மேற்பட்ட யானை விரட்டும் குழுவினர் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவில் பந்தலூர் இரும்பு பாலம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டுக்கொம்பன் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.
குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கட்டக் கொம்பன் யானை அப்பகுதி பொதுமக்களை விரட்ட துவங்கியது இதனால் அச்சம் அடைந்த மக்கள் நான்கு புறங்களும் ஓடி உயிர் பிழைத்தனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment