நீலகிரி குன்னூர் மரப்பாலம் அருகே பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை எட்டு ஆக உயர்ந்துள்ளது
சுற்றுலா பேருந்தில் 54 பேர் பயணித்த நிலையில், காயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உதகைக்கு சுற்றுலா சென்றுவிட்டு தென்காசி கடையம் பகுதிக்கு திரும்பும் வழியில் பள்ளத்தில் விழுந்த பேருந்து - 8 பேர் உயிரிழப்பு, 3 பேர் கவலைக்கிடம்.
நீலகிரி குன்னூர் சுற்றுலாப் பேருந்து விபத்து - விபரம் பெற அவசர எண்கள் அறிவிப்பு!..
விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி அறிய 1077, 9443763207 தொடர்பு கொள்ளலாம்.
நீலகிரி குன்னூர் சுற்றுலா பேருந்து விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் முதல்வர் அறிவிப்பு
படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம்அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்
காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் கிருஷ்ணகுமார் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment