கூடலூரில் காட்டு யானை தாக்கியதில் மாற்றுத்திறனாளி உயிரிழந்த நிலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 26 September 2023

கூடலூரில் காட்டு யானை தாக்கியதில் மாற்றுத்திறனாளி உயிரிழந்த நிலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்


கூடலூரில் காட்டு யானை தாக்கியதில் மாற்றுத்திறனாளி உயிரிழந்த நிலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்


நீலகிரி மாவட்டம்  பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே கோரஞ்சல் சப்பந்தோடு பகுதியை சேர்ந்த  46 வயதான குமார் என்பவர் இன்று மாலை சப்பந்தோடிலிருந்து கோரஞ்சாலுக்கு சென்ற போது காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். கூடலூர் பந்தலூர் தாலுகா பகுதிகளில் மனித வனவிலங்கு ஏற்படுவதும் அடிக்கடி பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானைகள் உலா வரும் சம்பவங்களும் அதிகளவு நடந்து வரும் நிலையில்  மனித வனவிலங்கு மோதலை கட்டுப்படுத்த கோரி பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சேரம்பாடி சுங்கம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ‌ மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் வனத்துறை அமைச்சர் நேரில் வர வந்து இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad