கேத்தி லைட்லா மெமோரியல் பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா நடைபெற்றது.
பள்ளி நிர்வாகம் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆகியன இணைந்து செயல்படுத்தும் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் துவக்க
விழாவிற்கு பள்ளி முதல்வர் கேரி எவரெட் தலைமை தாங்கினார்.
தலைமை ஆசிரியர் நெல்த்ராப்
முன்னிலை வகித்தார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தை துவக்கி வைத்து பேசும்போது
மாணவர்களை குறிவைத்து ஏராளமான விளம்பரங்கள் செய்யபடுகிறது. அதிலிருந்து காப்பாற்றி கொள்ள விழிப்போடு இருப்பது அவசியம். தேவையில்லாத பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் மூலம் நுகர்வோர் சார்ந்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. மேலும் ஏமாற்றங்கள் தவிர்க்க நுகர்வோர் சார்ந்த கல்வி அறிந்து கொள்வது அவசியம் என்றார்.
உதகை மின்சார வாரிய செயற்பொறியாளர் சிவகுமார் பேசும்போது மின்சாரம் இன்றி வாழ முடியாத நிலையில் உள்ளோம். அதனால் நாளுக்கு நாள் மின்சார தேவை அதிகமாகிறது. ஆனால் மின்சார உற்பத்தி அதிகரிக்க சிரமம் உள்ளதால் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதனால் மரபுசாரா எரிசக்தி முறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. எனவே மின்சார சிக்கனம் செய்வதில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். அதுபோல மின்சார உற்பத்தி மற்றும் மின்சார சிக்கன கருவிகளை கண்டறிவதில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் பேசும்போது உணவு நுகர்வில் மாணவர்கள் அக்கறை கொள்ள வேண்டும். இயற்க்கை கொடுத்த காய்கறிகள், பழவகைகள், கீரைகள் அனைத்தும் ஊட்டச்சத்துகள் மற்றும், மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இவை உணவுடன் கூடிய மருந்தாகவும் பங்காற்றின. இவற்றை அடிக்கடி உணவில் எடுத்து கொள்வதால் நோய் வராமல் காத்து கொள்ள முடியும். இளைய பருவத்தில் சரியான உணவுகள் எடுத்து கொள்ளாத பட்சத்தில் உடல் ஆரோக்கியம் கிடைக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் ஆடம்பர உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அவற்றை தவிர்க்க வேண்டும் என்றார்.
பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் நுகர்வோர் உரிமைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர் பிரபாகரன் தலைமையிலான குழுவினர் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
No comments:
Post a Comment