நீலகிரி மாவட்டம் பந்தலூர். அடுத்துள்ள உப்பட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழில்நுட்ப மையத்தினை தொழிலாளர் துறை அமைச்சர் கனேசன் துவக்கி வைத்தார்
பந்தலூர், அருகே உப்பட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிய தொழிற்பயிற்சி மையத்தினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் துவக்கி வைத்தார். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உப்பட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலைத்தில் டாடா டெக்னாளஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து ரூ.34.65 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட தொழில் 4.0 தொழில்நுட்ப மையத்தினை தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கனேசன் துவக்கி வைத்து பேசுகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களின் ஒட்டு மொத்த பயிற்ச்சியாளர்கள் சேர்க்கை விகிதத்தினை 100% -ஆக உயர்த்த துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,
உப்பட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கடந்த ஆண்டு 75% தேர்ச்சி விகிதம் என்றும் இதில் 42% தேர்ச்சி பெற்றவர்கள் பணியமர்த்தப்பட்டதாகவும், இந்த ஆண்டு தொழில் 4.0 புதிய தொழிற்பிரிவுகளில் 88 இருக்கைகள் கூடுதலாக்கப்பட்டு. 23.9.2023 வரை சேர்க்கை நடைபெறுவதால் கடந்த ஆண்டு சேர்க்கை விகிதமான 100 விழுக்காட்டினை போல் இவ்வாண்டும் 100% சேர்க்கை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் .
மேலும் தமிழ்நாட்டில் அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களையும் நவீனப்படுத்துவதற்கு ரூ 2875 கோடிகள் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு பிரப்பித்துள்ளார் அதன் மூலம் 6 ஆயிரம் மாணவர்கள் சேர்கை அதிகரிக்கப்பட்டுள்ளது .நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பல்வேறு பணிகளை செய்து வருகின்றது இதனை மாணவர்கள் முறையாக பயன்படுத்தி வாழ்கையில் வெற்றிப் பெறவேண்டும் என அவர்கூறினார்.
மேலும் கூறுகையில் தற்போது முதலமைச்சர் ஆட்சி பொருப்பேற்ற இந்த காலகட்டத்தில் தமிழ் நாட்டில் தொழிற் பயிற்சிகள் அமைக்கப்பட்ட பிறகு கடந்தாட்டை காட்டிலும் இந்த ஆண்டு 7500மாணவர்கள் தொழிற்பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளனர் என கூறினார் .
தளபதியார் அவர்கள் பள்ளி மாணவர்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தி அவர்களின் படிப்பிற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்து வருகின்றார் என பெருமிதத்துடன் கூறினார்..
இந் நிகழ்ச்சியில் கூடலூர் கோட்டாச்சியர் முஹம்மது குதரதுல்லா தலைமை வகித்தார்.கோவை மண்டலபயிற்சி துனை இயக்குநர் முஸ்தப்பா வரவேற்றார் .தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் குமார்ஐயந்த் மற்றும்தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவி.கனேசன் ஆகியார் சிறப்புரையாற்றினார்.இவருடன் நெல்லியாள நகரமன்ற தலைவர் சிவகாமி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் அலுவளர்கள் பள்ளி மாணவ மாணவியர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர் இறுதியாக அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் வெங்கடகிருஷ்ணன் நன்றி கூறினார்..
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment