கூடலூர் வனக்கோட்டம், பந்தலூர் வனச்சரகம், பந்தலூர் காவல் பகுதிக்கு உட்பட்ட பந்தலூர் - கூமூலா செல்லும் சாலையில் உள்ள நத்தம் நகர் பகுதியில் வசிக்கும் திரு.வினோத் த/பெ வையாபுரி, கதவு எண் 13/ 275 என்பவருடைய பசுமாட்டினை ஊண் உண்ணியால் தாக்கப்பட்டு இறந்துள்ளது என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் பந்தலூர் வனச்சரக வன பணியாளர்கள் சம்பவம் நடைப்பெற்ற பகுதிக்கு விரைந்து சென்று கண்காணித்ததில் மேற்க்கண்ட முகவரியில் வசிப்பவரின் பசு மாட்டினை ஊண் உண்ணியால் தாக்கப்பட்டு இறந்தது உறுதியானது.இதனை தொடர்ந்து இன்று இறந்த பசு மாட்டின் உரிமையாளர் அவர்களுக்கு அதற்கான நிவாரண நிதியினை மாவட்ட வன அலுவலர் கூடலூர் அவர்களின் உத்தரவுபடி உதவி வன பாதுகாவலர் கூடலூர் அவர்கள் தலைமையில் ரூ.30,000 /- முப்பதாயிரம் காசோலை வழங்கப்பட்டது. மேலும் வன குழுவினர் ஊண் உண்ணியின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment