கர்நாடகாவில் பந்த் காரணமாக உதகையில் இருந்து பெங்களூரு செல்லும் பேருந்துகள் அனைத்தும் தமிழக எல்லையான கக்கநல்ல வரை இயக்க உதகை போக்குவரத்து கழகம் முடிவு
காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக கர்நாடகா அரசுகளை கண்டித்து தண்ணீர் பாதுகாப்பு குழு சார்பில் பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது
இதற்கு தனியார் வாகனங்கள்,உணவகங்கள், என ஏராளமான அமைப்புகள் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.
எனவே எல்லை பகுதிகளில் பதட்ட நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தில் இருந்து கர்நாடகவிற்கும் கர்நாடகவிலிருந்து தமிழகத்திற்கும் வாகனங்கள் இயக்கபடாமல் நிறுத்தபட்டுள்ளது.
மேலும் உதகையில் இருந்து பெங்களூரு செல்லும் பேருந்துகள் அனைத்தும் தமிழக எல்லையான கக்கநல்ல வரை இயக்க உதகை போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment