கூடலூரில் காட்டு யானை தாக்கியதில் மாற்றுத்திறனாளி உயிரிழந்தார் தொடரும் காட்டு யானை தாக்குதல் பொதுமக்கள் அச்சம்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரளா வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதியாகும் இப்பகுதியில் அடிக்கடி மனித விலங்கு மோதல்கள் நடைபெறுவது வழக்கமான ஒன்றுதான் இந்நிலையில் இன்று பந்தலூர் அருகே உள்ள சேரன் கோடு கோரஞ்சல் சப்பந்தோடு பகுதியை சேர்ந்த காந்தி என்பவரது மகன் குமார் 46 மாற்றுத்திறனாளியான இவர் சப்பந்தோடிலிருந்து கோரஞ்சாலுக்கு வந்து கொண்டிருந்த போது செடி மறைவில் இருந்த யானை இவரை தாக்கியதாக கூறப்படுகிறது பலத்த காயம் அடைந்த குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டனர் பின்பு வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
வனத்துறையினர் காயமடைந்த குமாரை பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் சென்றுள்ளனர் செல்லும் வழியிலேயே குமார் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது தற்போது குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக பந்தலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது காட்டு யானை தாக்குதல் குறித்து வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment