பந்தலூர் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ஒன்றிய பா.ஜ.க அரசு இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றை பெயர் மாற்றம் செய்து மசோதா தாக்கல் செய்ததை திரும்ப பெற வலியுறுத்தியும், ஒன்றிய அரசை கண்டித்தும், உயர்நீதி மன்றம் அறிமுகப்படுத்தியுள்ள இபெயிலிங் முறையில் வழக்கறிஞர்களுக்கு சிரமம் உள்ளதால் அதனை உடனடியாக நிறுத்த கோரியும் சென்னையில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநில வழங்கறிஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் போராட்டம் நடத்தி வருவதற்கு ஆதரவாக பந்தலூர் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தை புறக்கணித்து நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மூத்த வழக்கறிஞர் சந்தோஷ், ஸ்ரீ வர்கீஸ், கணேசன், ஜான்சன் சனூஜ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment