ஜெய்காளி; ஓம்காளி'; 'கணேசா' கோஷங்கள் விண்ணை பிளந்தது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் ஊட்டியில் விநாயகர் ஊர்வலம் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தில் பெண்கள் குழந்தைகள் என ஆயிரக்கணக்னோர் பங்கேற்பு... இந்து முன்னணி சார்பில் ஊட்டி நகரம், மஞ்சூர், கூடலூர், பந்தலூர், குன்னூர், கோத்தகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் 369 விநாயகர் சிலைகள் வைக்கபட்டு இருந்தன. மாவட்டம் முழுவதும் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர் நீலகிரியின் பல்வேறு பகுதிகளில் இன்று விநாயகர் விசர்ஜன ஊர்வலம் அமர்க்களமாக அமைதியாக நடந்தது. ஊட்டியில் இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., சார்பில், தேவாங்கர் மண்டபத்தில் துவங்கிய ஊர்வலத்தை இந்து முன்னணி மாவட்ட தலைவர், பாஜக மாநில பொது செயலாளர் ஏ.பி.முருகானந்தம், பாஜக மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், அதிமுக மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஊர்வலமானது, சேரிங்கிராஸ், கமர்ஷியல் சாலை, புளுமவுன்டன் சாலை, மாரியம்மன் கோவில், மெயின் பஜார் வழியாக பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு சென்றது. அங்கிருந்து, காமராஜர் சாகர் அணைக்கு அனுப்பப்பட்டு, அங்கு 100க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தில், செண்டை மேளம், தாரை தப்பட்டை முழங்க நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஊட்டி பாம்பே கேசில் பகுதி இந்துமுன்னணி நிர்வாகிகள் 'மெகா' லட்டை தயாரித்து, வீதியில் வரும் பக்தர்களுக்கு வழங்கினர். ஊர்வலம் நடந்த இரண்டு மணிநேரம்,'ஜெய்காளி; ஓம்காளி'; 'கணேசா' கோஷங்கள் விண்ணை பிளந்தது. ஊர்வலத்தில் நீலகிரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பிரபாகர் தலைமையில் காவல்துறையினர் மிக சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment