நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூபாய் 1000 தகுதியுள்ள பெண்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உடனே பணத்தை வங்கியிலிருந்து எடுக்காவிட்டால் அவர்களுக்கு பணம் தேவையில்லை என்று முடிவு செய்து 1000 ரூபாய் அடுத்த மாதத்திலிருந்து கிடைக்காது என சில விக்ஷமிகள் புரளி கிளப்பி விட்டனர் உடனே பெண்கள் சாரை சாரையாக தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளில் குவிந்தனர்
நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கோத்தகிரி கிளையில் குவிந்த பெண்களால் வங்கி ஊழியர்கள் திக்குமுக்காடினர்
கிளை மேலாளரின் உத்தரவின் படி வங்கிக்கு மற்ற பணிக்கு வருபவர்களின் பணி பாதிக்காமலும் உரிமைத் தொகை வாங்க வந்த பெண்களை வரிசைப்படுத்தி டோக்கன் வழங்கி 5 பேர் வீதம் வங்கிக்குள் அனுமதித்து தனி கவுண்ட்டர் அமைத்து தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 1000 வழங்கினர் வீண் வதந்திகளையும் புரளிகளையும் நம்ப வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment