பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடி பகுதியில் இன்றுதமிழ மார்ஷியல் ஆர்ட்ஸ் கிளப்பின் மூலமாக கின்னஸ் உலக சாதனை முயற்சி சேரம்பாடி அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 September 2023

பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடி பகுதியில் இன்றுதமிழ மார்ஷியல் ஆர்ட்ஸ் கிளப்பின் மூலமாக கின்னஸ் உலக சாதனை முயற்சி சேரம்பாடி அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது..

 


பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடி பகுதியில் இன்றுதமிழ மார்ஷியல் ஆர்ட்ஸ் கிளப்பின் மூலமாக  கின்னஸ் உலக சாதனை முயற்சி சேரம்பாடி அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது..

பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடி செக்போஸ்ட்  அரசு தேயிலைத் தோட்டத்தில் பனி புரிந்து வரும்  சக்திவேலின் மகன் சதீஸ்  இவர்  சேரம்பாடி  அரசு பள்ளியில் படித்து வந்தார் இவர் தற்போது தனியார் நிறுவனத்தில் பனியாற்றி வருபவர் இவர் தமிழி மார்ஷியல்  ஆர்ட்ஸ் கராத்தே பயிற்சி நிலையம் நடத்தி வருகிறார்.


இன்னிலையில்உலக சாதனை படைக்க வேண்டும் என்ற என்னத்தில் இவர் புல்லட்டை தன் மீது ஏற்றி பயிற்சி செய்து வந்தார் இப்படி ஒன்னறை ஆண்டுகள் பயிற்சி மேற்கொண்டார் .பின்பு உலக சாதனை புரிவதற்கு சம்மந்த பட்ட அலுவளரிடம் ஆறு மாத முன்பு விண்ணப்பித்தார் ...


இன்னிலையில் மும்பை பட்டீத் டைஹோடா என்பவர் தன் மீது 121. புல்லட்டை ஏற்றி உலக சாதனை படைத்தார் .இதை முறியடிக்கும் வகையில்  தோட்டத் தொழிலாளர் மகன் சதீஸ் என்ற தமிழர் இன்றைய  தினம் தன் படித்த பள்ளிக்கு பெருமை கிடைக்கும் வகையி  பள்ளி வளாகத்தில் வைத்து தன் உடல் மீது  தொடராந்து 150.புல்லட் பைக்கை ஏற்றி  உலக சாதனை முயற்சியை மேற் கொண்டார் .றுதியாக இவர் உடலில் புல்லட் ஏற்றும் போது பார்வையாளர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர் பின்பு சதீசை தூக்கி தோழில் தூக்கி வைத்து விளையாட்டு மைதானத்தில் சுற்றினர்.


இந்த நிகழ்ச்சியில் கூடலூர் சட்ட மன்ற உறுப்பினர் திராவிடமணி தலைமையில் நடை பெற்றது. நிகழ்ச்சியில் சேரங்கோடு பஞ்சாமத்து தலைவி லில்லி ஏலீயாஸ்.துனை தலைவர் சந்திர போஸ் சேரம்பாடி வியாபார சங்க தலைவர் ரவி.சேரம்பாடி அரசு மருத்துவர் மெல்வீன்.மற்றும் முரட்டுகாளை ஸ்போர்ட்ஸ்  சக்கரவர்த்தி நிகழ்ச்சி ஏற்பாட்டை செய்திருந்தார்.நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

No comments:

Post a Comment

Post Top Ad