எமரால்டு பகுதியில் இரண்டு புலிகள் மர்மமான முறையில் இறந்துள்ளது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 9 September 2023

எமரால்டு பகுதியில் இரண்டு புலிகள் மர்மமான முறையில் இறந்துள்ளது


நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா அடுத்துள்ள எமரால்டு பகுதியில் எமரால்டு அணையில் உள்ள பள்ளத்தில் புலி ஒன்றை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து முட்புதர் ஓரம் மற்றொரு புலி இறந்த நிலையில் இருந்தது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் இரண்டு புலிகளின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள்...

இதைத் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் வனத்துறைதுறையினர். புலிகள் எப்படி மர்மமான முறையில் இருந்தது என்று கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக உள்ளனர். ஆகவே புலிகளை யாரேனும் உணவில் விசம் கலந்து வைத்துள்ளார்களா அல்லது புலிகள் சண்டையிட்டு அதன் விளைவாக இரறந்துள்ளதா என்பதைக் குறித்து சந்தேகங்களைக் கொண்டு புலிகளின் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவிற்கு பின்னரே இந்த புலிகள் இறந்ததற்கான மர்மம் விலகும்... 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மஞ்சூர் செய்தியாளர் எஸ் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad