நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகள் குறைந்த பட்ச ஆதார விலை வேண்டி கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர் விசாரித்த நீதிமன்றம் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவிற்கு ஈடுகட்டும் வகையிலான கொள்முதல் விலையை அமல்படுத்த தேயிலை வாரியத்திற்கு உத்தரவிட்டும் வாரியம் நிறைவேற்றாத காரணத்தினால் நாக்கு பெட்டா நலசங்கத்தினர் தொடர் உண்ணாவிரதம் அறிவித்து நான்கைந்து ஊர்மக்கள் என வரையறை செய்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியதுடன் ஐகோர்ட்டில் வழக்கும் தொடுக்கப்பட்டது 20 நாட்கள் உண்ணாவிரதம் தொடர்ந்த நிலையில் வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது வழக்கை விசாரித்த நீதிமன்றம் தற்காலிகமாக ஆதார விலையாக 22.50 வழங்க வேண்டுமென்றும் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை கொள்முதல் விலையை ஐகோர்ட்டில் சமர்ப்பிக்க தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநருக்கு உத்தரவிட்டதுடன் வழக்கை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த செய்தியை கேட்டு தொடர் உண்ணாவிரதத்தில் இருந்த விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்ததுடன் படுக பாரம்பரிய நடனமாடி ஐகோர்ட் தீர்ப்பை வரவேற்றதுடன் தங்களின் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
விரைவில் தாங்கள் எதிர்பார்த்த குறைந்த பட்ச ஆதார விலை 33.75 கிடைக்கும் என நம்புவதாக தேயிலை விவசாயிகள் தெரிவித்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment