பந்தலூர் அருகே, அத்திக்குன்னா தனியார் எஸ்டேட், மட்டத்துபாடி குடியிருப்பு பகுதியில் திடீர் திடீர் பள்ளத்தால் பொதுமக்கள் அச்சம்...
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே, அத்திக்குன்னா தனியார் எஸ்டேட், மட்டத்துபாடி என்ற இடத்தில் குடியிருப்பு பகுதியில்கடந்த 15ப் தேதி சுமார் 30 அடி ஆழத்திற்கு வானில் இருந்து தோன்றிய சூழல் காற்றுடன் திடீர் பள்ளம் ஏற்பட்டு, பூமி உள்வாங்கியது. அதனையடுத்து எஸ்டேட் நிர்வாகத்தினர் பள்ளத்தை சுற்றிலும் தடுப்பு வேலி அமைத்தனர். மேலும் இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். பின்னர்
இந்த பகுதியை கூடலூர் ஆர்.டி.ஓ. முகம்மதுகுதரத்துல்லா தலைமையில், நீர்வள ஆதார துறை உதவி செயற்பொறியாளர் சதீஷ்குமார், உதவி புவியியளாலர் சரவணன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் பூபாலன், தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். இந்நிலையில் இன்று மீண்டும் அதே இடத்தில் 100 அடி ஆழத்திற்கு பூமி உள்வாங்கியது. மேலும் இதன் பக்கவாட்டுப் பகுதியில் இடிந்து வருவதால்
தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் இதன் அருகே உள்ள அனைத்து குடியிருப்புகளும் காலி செய்யப்பட்டு வருகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment