நீலகிரி மாவட்ட திமுக நகர-ஒன்றிய-பேரூர் கழக செயலளார்கள் கூட்டம்.
நீலகிரி மாவட்ட திமுக நகர-ஒன்றிய-பேரூர் கழக செயலாளர்கள் கூட்டம் மாவட்ட கழக அலுவலகமான உதகை கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் 24.9.2023 ஞாயிற்றுக்கிழமை திருப்பூர் மாவட்டம் படியூரில் கழக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்கள் தலைமையில் நடைபெறும் “வாக்குச்சாவடி நிலை முகவர்கள்” பயிற்சி பாசறை கூட்டத்திற்கு நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை, குன்னூர், கூடலூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி முகவர்கள் BLA-2 அனைவரையும் தவறாது கலந்துக்கொள்ள ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் நகர செயலாளர்கள் ஜார்ஜ், ராமசாமி, சேகரன், இளஞ்செழியன் பாபு, ஒன்றிய கழக செயலாளர்கள் லியாகத்அலி, பரமசிவன், லாரன்ஸ், காமராஜ், நெல்லை கண்ணன், பிரேம்குமார், பீமன், சிவானந்தராஜா, சுஜேஷ், பேரூர் கழக செயலாளர்கள் பிரகாஷ்குமார், உதயகுமார், சதீஷ்குமார், நடராஜன், ரமேஸ்குமார், சஞ்சீவ்குமார், காளிதாஸ், சுப்ரமணி, சின்னவர், மார்டின் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment