கோத்தகிரி கருவி அறக்கட்டளை மற்றும் கே. பீ. எஸ் கலை கல்லூரி இணைந்து சுற்றுசூழல் நிர்வாகம் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது.
நிகழ்வில் கல்லூரி நிறுவன பொறுப்பு முதல்வர் முனைவர் பிரதீப் குமார் தலைமை தாங்க, இந்தியாவின் மர மனிதன் விருது பெற்ற பசுமை போராளி யோகநாதன் அனைத்திந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் துணைத்தலைவர் திரு. செவ்விளம் பரிதி மற்றும் வழக்கறிஞர் திரு. தமிழரசன், சுற்றுசூழல் ஆர்வலர் மோகன்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கினர். மேலும் இந்நிகழ்வில் சுகாதார தூதுவர் திருமதி மல்லிகா, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், ஊராட்சி அளவிலான ஊக்குவிப்பாளர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இயற்கை வாழ்வியல் கல்வி மற்றும் பயிற்சியின் மாணவர்களுக்கு அளிக்கும் இந்த நிகழ்வினை கருவி அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது.
முன்னதாக 2022 ஆண்டுக்கான பசுமை முதல்வன் விருது பெற்ற கருவி அறக்கட்டளை நிறுவன தலைவர் ஜான் சிரில் ஹென்றி வரவேற்புரை வழங்கினார்.
முடிவில் கருவி அறக்கட்டளை துணைத்தலைவர் திரு. உதயன் நன்றி நவிழ அறக்கட்ளை சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டு விழா நிறைவு பெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment