கூடலூர் தோட்ட தொழிலாளர் தொலைபேசி மையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், தோட்ட தொழிலாளர் தொழிற் பயிற்சி மைய குடிமக்கள் நுகர்வோர் மன்றம், ஏகம் பவுண்டேஷன் ஆகியன இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு பயிற்சி மைய முதல்வர் ஷாஜி ஜோர்ஜ் தலைமை தாங்கினார்.
கூடலூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ராஜ்குமார் பேசும்போது சாலையில் வாகனங்களை பாதுகாப்புடன் இயக்க வேண்டியது அவசியமாகிறது. இளம் வயது சிறுவர்கள், மாணவர்கள் ஓட்டுநர் உரிமம் இன்றி சாலைகளை வேகமாக வாகனங்களை இயக்குவது அதிகரித்து வருகிறது. இதனால் விபத்துக்கள் அதிகரித்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே இளைஞர்கள், மாணவர்கள் கண்டிப்பாக முறையான பயிற்சி பெற்று, ஓட்டுநர் உரிமம் எடுத்துக் கொண்டு வாகனங்களை இயக்க வேண்டும்.18 வயதுக்கு குறைந்தவர்கள் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனங்களை இயக்கும்போது வாகனத்தை ஓட்டியவருக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும், அவரின் பெற்றோருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 25 ஆண்டுகள் ஓட்டுநர் உரிமம் பெற தடை விதிக்கப்படுகிறது. போதையில் வாகனங்கள் இயக்க கூடாது. தற்போது நகரங்களில் பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கபட்டு அபராதம் விதிக்கபடுகிறது. அதனால் வாகனங்கள் இயக்கும்போது சாலை விதிகளை மதித்து, கவனமுடன் இயக்க வேண்டும் என்றார்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது
18 வயதுக்கு உட்பட்டவர்கள் மூளை திறன் முதிர்வு இல்லாததால் வாகனங்களை கட்டுபடுத்த இயலாத நிலையால் வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்படுகிறது. மேலும் செல்போன் பேசியபடி வாகனங்கள் இயக்க கூடாது. மேலும் இளைஞர்கள் ஆர்வத்துடன் வாகனங்களை வாங்கி வேகமாக இயக்குவதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் கை கால்களை இழந்து முடமாகி வாழ்க்கையை இழந்து விடுகின்றனர். சிலர் உயிரிழப்புகளையும் சந்திக்கும் சூழல் உருவாக்கி உள்ளது எனவே வாகனங்களை அக்கறையோடு, நிதானமாக இயக்க முன்வர வேண்டும் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக இருக்க சாலை பாதுகாப்பு விதிகளை மதிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், ஆல் த சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் ஆகியோர் பேசினார்கள்.
பயிற்சி மைய மாணவர்கள் 100ககு மேற்பட்டோர் பங்கேற்றனர். முன்னதாக பயிற்றுநர் பெஞ்சமின் வரவேற்றார். முடிவில் பயிற்றுநர் செல்வகுமார் நன்றி கூறினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment