பந்தலூர் அருகே கரியசோலை அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 16 September 2023

பந்தலூர் அருகே கரியசோலை அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம்


பந்தலூர் அருகே கரியசோலை அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம் நடைபெற்றது.


இரத்த தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் என்கிற தலைப்பில் நடைபெற்ற விழிப்புணர்வு இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் புளோராகுளோரி  தலைமை தாங்கினார் பட்டதாரி ஆசிரியர் மார்க்ரேட் மேரி முன்னிலை வகித்தார்.


பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பாசிரியர் மணிவாசகம் நிகழ்ச்சி நோக்கம் மற்றும் குடிமக்கள் மன்ற செயல்பாடுகளை குறித்து விளக்கமளித்தார். 


நெலாக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய இடைநிலை சுகாதார பணியாளர் மகரஜோதி மற்றும் ஆஷா பணியாளர் தமிழரசி


கலந்துகொண்டு ரத்த தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் குறித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து மாணவர்கள் இரத்த தானம் செய்யவும் உடல் உறுப்பு தானம் செய்யவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


நிகழ்ச்சியில் ஆசிரியர் மேகலா ஆசிரியர் நிஷாத் மற்றும் மாணவ மாணவிகள் 90 பேர் கலந்து கொண்டனர். ஆசிரியை நிரோஷா நன்றி கூறினார்கள் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:

Post a Comment

Post Top Ad