நீலகிரி மாவட்டம் உதகை 21 அது வார்டு பகுதியில் மெயின் பஜாரில் இருந்து லோயர் பஜார் செல்லும் நடைபாதைகளில் ஆங்காங்கே புதிய கம்பம் யாருடையது? - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 18 September 2023

நீலகிரி மாவட்டம் உதகை 21 அது வார்டு பகுதியில் மெயின் பஜாரில் இருந்து லோயர் பஜார் செல்லும் நடைபாதைகளில் ஆங்காங்கே புதிய கம்பம் யாருடையது?

 


நீலகிரி மாவட்டம் உதகை 21 அது வார்டு பகுதியில் மெயின் பஜாரில் இருந்து லோயர் பஜார் செல்லும் நடைபாதைகளில் ஆங்காங்கே கம்பம் பொருத்தி உள்ளார்கள் . அது எந்தக் கம்பம் யாரை சார்ந்தது யாரிடம் அனுமதி பெற்றார்கள் என்பது மர்மமாகவே உள்ளது. அதை பொருத்துவதற்காக தோண்டப்பட்ட குழியில் இருந்து எடுக்கப்பட்ட மண் அப்படியே ஆங்காங்கே காணப்படுகின்றது அதை அப்புறப்படுத்தாத பட்சத்தில் பிற்காலத்தில் அது குப்பை மேடாக காட்சியளிக்க வாய்ப்புகளும் உள்ளது. இந்நிலையில்  பெரிய பள்ளிவாசல் நடைபாதையும் அங்கு தான் அமைந்துள்ளது. இஸ்லாமியர்களில் யாராவது இறந்து விட்டால் பெரிய பள்ளிவாசல் சென்று தொழகை நடத்தி விட்டு மீண்டும் அதே வழியில் பிரேதத்தை எடுத்து செல்வார்கள். இந்நிலையில் நடப்பதற்கும் பிரேதத்தை எடுத்து செல்வதற்கும் பொறுத்திருக்கும் கம்பம் இடையூறாகவும் சிரமமாகவும் இருப்பதினால் அந்த கம்பத்தை அப்புறப்படுத்தி மாற்று இடத்தில் பொருத்துமாறு நகர மன்ற தலைவர் திருமதி வாணிஸ்வரி மேகநாதன் மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:

Post a Comment

Post Top Ad