பந்தலூரில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் வெகு சிறப்பாக நடைபெற்றது
நாடு முழுவதும் கடந்த செப்.18ம் தேதி விநாயகர் சதுர்த்தி வெகு சிறப்பாக கொண்டாடபட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கபட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து இன்றைய தினம் விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டு விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது. பந்தலூர் ரிச்மண்ட் மாரியம்மன் கோவிலில் அனைத்து சிலைகளும் வரிசையாக நிறுத்தப்பட்டு பந்தலூர் பஜார், உப்பட்டி வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பொன்னானி ஆற்றில் கரைக்க பட்டது. இதில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் கூடுதல் காவல்துறை கண்கானிப்பாளர்.
சௌந்தர்ராஜன்,தலைமையில் நடைபெற்றது இந்த பேரணியில் தேவாலா காவல் துறை கண்கானிப்பாளர் செந்தில்குமார், சேரம்பாடி காவல் நிலைய ஆய்வாளர் அமுதா, தேவாலா இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம் மற்றும் கோட்டாட்சியர் கிருஷ்ணனமூர்த்தி கிராம நிர்வாக அலுவலர்,கருணா பிதீர்காடு ரேஞ்சர் பிரவீன் , யானை கண்காணிப்பு குழுவினர், வேட்டை தடுப்பு காவலர்கள் தீயணைப்பு துறையினர் மற்றும் 200.மேற்பட்ட காவலர்கள் பனியில் ஈடுபட்டனர் இவர்கள் பொதுமக்கள் இடையே ஒருபுறமாக நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment