கழிவுநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட குழியினால் ஒரு ஊரே சாலையை இழந்தும் அதன் துர்நாற்றத்தின் காரணமாக நோய் பரவும் அபாயத்திலும் இருக்கின்றது நடவடிக்கை எடுக்குமா நகராட்சி நிர்வாகம்? - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 24 September 2023

கழிவுநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட குழியினால் ஒரு ஊரே சாலையை இழந்தும் அதன் துர்நாற்றத்தின் காரணமாக நோய் பரவும் அபாயத்திலும் இருக்கின்றது நடவடிக்கை எடுக்குமா நகராட்சி நிர்வாகம்?


பந்தலூர் பழைய சினிமா தியேட்டர் பகுதியான எம்ஜிஆர் நகர்  பகுதியில் சுமார் ஐம்பது குடும்பங்கள் உள்ளது இந்த பகுதியில் மூன்று மாததிற்கு முன் கழிவு நீர் அமைப்பதற்காக நடை பாதை பகுதியை உடைத்து கால்வாய்  நெல்லியாளம் நகராட்சியின் மூலமாக தோன்டப்பட்டது.

 

இன்னிலையில் அந்த பணிகள் துவங்காமல் கிடைப்பிலேயே போடப்பட்டது . இந்த பகுதியில் அந்த சிமென்ட் சாலையை தான் பயன் படுத்தி வந்தனர் தற்போது அந்த பகுதியில் தோன்ட பட்ட மண் நடைபாதையிலேயே கிடப்பதால் பொது மக்கள் தங்கள் வீட்டிற்கு செல்வோ பொருட்களை எடுத்து செல்லவோ சிலின்டர் வண்டிகள் போக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பாக மருத்துவமனைக்குக்கூட முதியவர்களை கூட்டிச்செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது சிமென்ட் சாலையில் தோன்டி போடப்பட்ட மண்குவியலின் காரணமாக சிறமப்பட்டு வருகின்றனர் .


மேலும் அப்பகுதியில் சாலையின் இறுதியாக உள்ள ஒருவரின் வீட்டின் இருபுறமும் தடுப்பு சுவர் அமைத்து அவ்‌வழி மூடப்பட்டது இவ்வாறு மூடப்பட்ட இடத்தில் மழை நீர் தேங்கி சாக்கடை குழியாக கழிவு நீர் தேங்கி உள்ளது இவ்வாறு தேங்கியுள்ள சாக்கடை நீரால் துர்நாற்றம் வீசுவதோடு டெங்கு காய்ச்சல் பரவும் அபாயமும் உள்ளது.


இதன் சம்மந்தமாக நகராட்சியில் தெரிவித்தும் எந்த நடவடிககையும் எடுக்க வில்லை இறுதியாக கோட்டாச்சியருக்கும் மனு கொடுக்கப்பட்டது இதிலும் பயன் இல்லை.இந்த நிலையில்பிரசாந்த் என்பவர் இறுதியாக மக்களை திரட்டி  நெல்லியாள அலுவலக முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட போவதாக தெரிவித்துள்ளார்.. 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad