நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அனுமன் சேனா சார்பில் வினாயகர் ஊர்வலம் நடைபெற்றது.
21.9.2023 வியாழன் அன்று டானிங்டன் பகுதியில் தொடங்கி அதிகமான மழைக்கிடையிலும் வாகனங்களில் பூஜைசெய்யப்பட்ட வினாயகர் சிலைகள் ஊர்வலமானது காமராஜர் சதுக்கம் மார்க்கெட் பஸ் நிலையம் கடைவீதி ராம்சந்த் கன்னேரிமுக்கு வழியாக சென்று உயிலட்டி நீர்வீழ்ச்சி பகுதி ஆற்றில் கறைக்கப்பட்டது
ஏராளமான இந்து பக்தர்கள் ஓம்காளி ஜெய்காளி பாரத்மாதாகி ஜெய் என்ற கோஷத்துடன் பேண்டுவாத்தியம் இசைக்க நடனமாடி உற்சாகமாக சென்று சிலையை கறைத்தனர்
கோத்தகிரி காவல் ஆய்வாளர் திரு . வேல்முருகன் அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் திரு . யாதவ கிருஷ்ணன் திரு . ரமேஷ் திரு . ரகுமான் கான் மற்றும் காவலர்கள், போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு . பதி உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினருடன் இணைந்து பாதுகாப்பு பணியை திறம்பட மேற்கொண்டனர்
சிலை கறைப்பு பணியில் பேரிடர் மீட்புப் படையினர் சிறப்பாக உதவினர் . கடைசிவரை வருவாய்த்துறையினர், வனத்துறையினர், தீயணைப்பு துறையினர், ஆம்புலன்ஸ் மற்றும் உள்ளூர் மக்கள் ஆகியோர் உடனிருந்து முழுமையடையச்செய்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment