தேயிலைக்கு குறைந்த பட்ச ஆதார விலை கேட்டு 20 ஆவது நாளாக விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 September 2023

தேயிலைக்கு குறைந்த பட்ச ஆதார விலை கேட்டு 20 ஆவது நாளாக விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம்

 


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நட்டக்கல் மைதானத்தில் தேயிலைக்கு குறைந்த பட்ச ஆதார விலையாக ரூபாய் 33.75 நிர்ணயம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் 20 ஆவது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மலை மாவட்டமான நீலகிரியில் வனவிலங்குகளின் அட்டகாசத்தால் குறைந்த அளவிலான இடத்தில் மட்டும் மலை காய்கறிகள் பயிரிடப்படுகிறது விவசாயிகளின் பிரதான பயிராக தேயிலை விவசாயம் இருந்து  வருகிறது இந்த நிலையில் வெளிச்சந்தையிலும் வெளிநாடுகளிலும் மற்றும் தேயிலை விவசாயிகளே கடையில் வாங்கும் டீதூள் விலை மிக அதிகமாக உள்ள நிலையில் விவசாயிகளின் தேயிலைக்கு மிக குறைந்த விலையே கிடைத்து வருவதால் மக்கள் தங்கள் அன்றார தேவைகளான உணவு மருத்துவம் மற்றும் குழந்தைகளின் கல்வி ஆகியவற்றை கவனிக்க முடியாமல் வாழ்வாதாரம் பாதிப்படைந்த நிலையில் தேயிலைக்கு குறைந்த பட்ச ஆதாரவிலை வேண்டி  நாக்குபெட்டா படுகர் சங்கத்தினர் தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் ஒவ்வொரு நாளும் படுக சமுதாயத்தை சேர்ந்த நான்கைந்து ஊர்கள் சேர்ந்து இந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் 20ஆம்நாள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் நெடுகுளா ஒசாட்டி குருக்கத்தி ஆகிய ஊர்களை சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமான படுக மக்கள் பங்கேற்றனர் 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும்  நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad