பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு மேல்நிலை பள்ளியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஈஷா ஆரோக்கிய அலை, சோலா குழுமம், நீலகிரி சேவா கேந்திரம், சிறியூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், கோவை அரவிந்த் கண் மருத்துவ மனை ஆகியன இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமினை நடத்தினர் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 11 September 2023

பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு மேல்நிலை பள்ளியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஈஷா ஆரோக்கிய அலை, சோலா குழுமம், நீலகிரி சேவா கேந்திரம், சிறியூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், கோவை அரவிந்த் கண் மருத்துவ மனை ஆகியன இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமினை நடத்தினர்


பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு மேல்நிலை பள்ளியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஈஷா ஆரோக்கிய அலை, சோலா குழுமம்,  நீலகிரி சேவா கேந்திரம், சிறியூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்,  கோவை அரவிந்த் கண் மருத்துவ மனை ஆகியன இணைந்து  இலவச கண் சிகிச்சை முகாமினை நடத்தினர்.


முகாமிற்கு ஈஷா தன்னார்வலர் கோமதி தலைமை தாங்கினார். சேரம்பாடி அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் கண்ணதாசன், சுரேஷ், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய துணை தலைவர் ராஜா, சேரம்பாடி வியாபாரிகள் சங்க செயலாளர் தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


சரஸ்வதி மகா வித்யாலயா பள்ளி தாளாளர் மனோஜ்குமார், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், நீலகிரி சேவா கேந்திர மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், வியாபாரிகள் நல சங்க தலைவர் ரவி ஆகியோர் முகாமினை துவக்கி வைத்தனர்.


அரவிந்த் கண் மருத்துவமனை கண் மருத்துவர் ருகேல், தலைமையிலான மருத்துவ குழுவினர் கண் சிகிச்சை அளித்தனர். 


ஈஷா குழும பொதுமருத்துவர் மோகன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பல்வேறு பொது மருத்துவ சிகிச்சை அளித்தனர். 


முகாமில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இருநூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்று சிகிச்சை பெற்றனர். கண் புரை அறுவை சிகிச்சைக்கு 20-க்கு மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.


ஈஷா தன்னார்வலர்கள் சந்தோஷ், வெற்றிவேல், அபிஷேக், ரமேஷ், முனிரஜு, சேரம்பாடி பகுதி சேவா கேந்திர தன்னர்வலர்கள் யோகேஸ்வரன், கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad